சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச்சென்ற நபர்; அதிரடி காட்டிய கத்தார் போலீஸ்..!

0
44

கத்தாரில் சைக்கிள் பாதையில் தனது காரை ஓட்டிச்சென்ற நபருக்கு எதிராக பொது போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து கத்தார் பொது போக்குவரத்து இயக்குநரகம் ட்வீட்டரில், சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச் சென்ற அந்த நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் அந்த ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சைக்கிள் பாதையில்

செல்லும் அந்த வாகனத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அந்த வாகனத்தையும், அதன் ஓட்டுனரையும் கைதுசெய்ய அதிகாரிகளுக்கு உதவியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சாலை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்துச் சட்டங்களை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு பொது போக்குவரத்து இயக்குநரகம் அழைப்பு விடுத்துள்ளது.