இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்

0
12

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆட்டதில் அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முன்று வடிவ போட்டிகளிலும் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசினார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழனி வந்தார்.பழனி மலைக்கோயிலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார்.