பைக் விற்பனை செய்யும் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

0
432

டெல்லி, சென்னை, ஹைதராபாத் போன்ற இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சமீபத்தில் டெல்லியில் சுத்தமான காற்றை விற்குமளவுக்கு சூழ்நிலை மோசமாக போனது.

காற்று மாசுபாட்டுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது வாகனங்களால் வெளியிடப்படும் புகைதான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக நிறுவனங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவையைச் சேர்ந்த ஸ்ரீவரு என்ற எலக்ட்ரிக் பைக் நிறுவனம், பத்து மரக்கன்றுகளை வெவ்வேறு பகுதியில் நட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினால், அவர்களுக்கு பைக் பணத்தில் இருந்து 25000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் 3 வகை பைக்குகள் மார்ச் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வர உள்ளன. இந்த பைக்குகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 126 கி.மீ தூரம் வரையிலும், எலைட் வேரியண்ட்டின் பேட்டரி 225 கி.மீ தூரம் வரையிலும் செல்லும் என சொல்லப்படுகிறது.