தர்ப்பை புல் பற்றி அறிந்ததுண்டா? இவற்றின் விசேஷ நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

0
487

தர்ப்பை புல், இந்த பெயரைக்கேட்டாலே, அநேகம் பேருக்கு இது என்ன புல் என்றே கேட்பர். இன்றைய நாகரிக உலகில் தர்ப்பை என்பது, வெகு சிலர் மட்டுமே, அதுவும் சமயச்சடங்குகளில் மட்டுமே, பயன்படுத்தும் ஒரு விசயமாக ஆகிவிட்டது.

இறந்தவருக்கு திதி கொடுக்கும்போது ஐயர், இந்த தர்ப்பைப் புல்லில் இந்த தர்ப்பைப் புல், மோதிரமாக அணியவும், இடுப்பில் சொருகவும் சொல்வார். இந்த தருப்பைப் புல் நம் முன்னோர்கள், மங்கலம், அமங்கலம் ஆகிய இரு வகைப்பட்ட வைதீகச் சடங்குகளிலும் இது சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். தருப்பை மூன்று தோஷங்களைச் சமப்படுத்தும். அக்னி போன்றது; உஷ்ண வீரியம் உடையது, அதிவேக முடையது, நீரை

சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

தருப்பைப் புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல நாட்கள் வாடாது. நீர் நிலையில் தோய்ந்தே இருந்தாலும் அழுகாது. இதனை “அம்ருத வீரியம்” என்றும் சொல்வர். இந்தப் புல் உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குறையாது. சூரிய கிரகணத்தின் போது இதன் வீரியம் அதிகமாகும்.

தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியா

 

கவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்க. தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள்.

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள்.

தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும்

 

, நுனியில் ருத்ரனும் இருப்பதால் பரம பவித்ரமானது. தர்ப்பைப்புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னி கற்பம் என்பது பெயர். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.

ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகு

 

ம், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம். யாகத்தைக் காப்பதற்கு வைக்கப்படும் யாகேஸ்வர தேவரின் கும்பத்திலுள்ள ஞானகட்கம் தர்ப்பையால் செய்து அமைக்கப்படும். திருநள்ளாறு தலத்தில் தலவிருட்சமே தர்ப்பைதான் என்பது குறிப்பிடத்தக்கது.