வெளிநாட்டினரைக் குடியேற்றுவதற்கான வழியைத் திறந்தது ஐக்கிய அரபு இராச்சியம்!

0
403

தெரிந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான குடியுரிமைக்கான வழியைத் திறப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

இதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் புதிய திருத்தத்தின் கீழ், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு இவ்வாறு குடியுரிமை அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று (சனிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சரவை, உள்ளூர் எமிரி நீதிமன்றங்கள் மற்றும் செயற்குழுக்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட தெளிவான அளவுகோல்களின் அடிப்படையில் குடியுரிமை பெறத் தகுதியுள்ளவர்களை பரிந்துரைக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்பது மில்லியன் மக்கள் தொகையில் சிறுபான்மைக் குடிமக்கள் உள்ளனர். இதுவொரு பெரிய புலம்பெயர்ந்த தொழிலாளர் படையைக் கொண்டுள்ளது. இவர்கள், பெரும்பாலும் தெற்காசியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் குடியேறிய இரண்டாவது அல்லது மூன்றாம் தலைமுறை குடியிருப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.