இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
502

(Today Horoscope 29.1.2021)

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

இன்று சார்வாரி வருடம், தை மாதம் 16ம் நாள், ஜமாதிஸானி 15ம் நாள், 29.1.2021 வெள்ளிக்கிழமை, பிரதமை காலை 12.56 வரை. ஆயில்யம் காலை 4.44 மணிவரை தியாஜ் 27.21 மரணயோகம்.

திதி: பிரதமை

இஷ்டிகாலம்.

சந்திராஷ்டமம்: உத்திராடம்

* நல்ல நேரம் : காலை 10.30 மணி – 11.30 மணி மாலை 11.30 – 12.00 மணி
* ராகு காலம் : மதியம் 10.30 – 12.00 மணி
* எமகண்டம் : காலை  3.00 – 4.30 மணி
* குளிகை : காலை 7.30 – 9.00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

மேஷம்:

உழைப்பால் உயரும் நாள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

ரிஷபம்:

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.

மிதுனம்:

அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் அமைதி திரும்பும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள்.

கடகம்:

வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

சிம்மம்:

முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய பயம் டென்ஷன் வந்து செல்லும்.

கன்னி:

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

துலாம்:

புத்துணர்ச்சி பெருகும் நாள். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த பணம் வந்து வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.

விருச்சிகம்:

சாதித்துக் காட்டும் நாள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

தனுசு:

சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டி பார்ப்பார்கள், உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்தாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

மகரம்:

திறமைகள் வெளிப்படும் நாள். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம்:

திடீர் யோகம் கிட்டும் நாள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

மீனம்:

நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மேலும் பல சோதிட தகவல்கள்

எமது ஏனைய தளங்கள்