தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது

0
351

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படாத 103 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியில் 910 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.