லெபனானில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு ; 100 க்கும் மேற்பட்டோர் காயம்

0
358
Lebanese anti-government protesters clash with security forces in front of the Serail (headquarters of the Governorate), in the northern port city of Tripoli, following a demonstration to protest against the economic situation, on January 28, 2021. - Tripoli was already one of Lebanon's poorest areas before the coronavirus pandemic piled new misery onto a chronic economic crisis. Many of its residents have been left without an income since Lebanon imposed a full lockdown earlier this month in a bid to stem a surge in Covid-19 cases and prevent its hospitals from being overwhelmed. (Photo by JOSEPH EID / AFP)

லெபனான் நகரமான திரிப்போலியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டக்கார்களுக்குமிடையிலான மோதல்களின்போது வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

30 வயதான ஒமர் டாய்பா என்ற நபரே ஆர்ப்பட்டங்களின்போது தோட்டாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த உள்ளூர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் அவரது இறுதி சடங்கில் பலர் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் தொடர்ச்சியான முடக்கல் நிலைகள் லெபனானில் அமுல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் ஆத்திரமடைந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது வடக்கு நகரத்தின் அரசாங்க கட்டிடத்தை எதிர்ப்பாளர்கள் தாக்க முயன்றதால் பொலிசார் நேரடி தோட்டாக்கள் பிரயோகத்தை மேற்கொண்டதாக ஆதராங்கள் கூறுகின்றன.

இதனால் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டிடத்தின் பாதுகாப்பு அறைக்கு தீ வைத்து, ஒரு வாயிலை அகற்றிய கலவரக்காரர்களை கலைக்க அவர்கள் நேரடி துப்பாக்கி பிரயோகங்களை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் கலவரக்காரர்கள் பின்னர் திரிப்போலியின் பிரதான சதுக்கத்தில் மக்கள் மீண்டும் ஒன்று கூடினர்.

லெபனானின் ஏழ்மையான நகரங்களில் ஒன்றில் அமைதியின்மை ஏற்பட்ட நான்காவது இரவு இது, கொவிட்-19 எழுச்சியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.