பிரித்தானியாவில் இந்த 13 பகுதிகளில் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறதாம்! எச்சரிக்கை: வெளியான பட்டியல்

0
373

பிரித்தானியாவின் குறிப்பிட்ட 13 பகுதிகளில் கொரோனா தொற்று விகிதம் உயர்ந்து கொண்டே இருப்பதாக கூறி, பட்டியல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் உருமாறி தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது இங்கிலாந்தின் குறிப்பிட்ட 13 பகுதிகளில் நோய் தொற்று அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக Derbyshire மற்றும் Yorkshire உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

ஆனால், சமீபத்திய வாரங்கள் படி பார்த்தால், இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது.

இருப்பினும், இந்த வாரம் பிரித்தானியா கொரோனா இறப்பின் மூலம் மொத்தம் 100,000 இறப்புகளை கொண்ட நாடு என்ற மைல்கல்லை எட்டியது.

எவ்வாறாயினும், இந்த வாரம் 100,000 இறப்புகளின் கடுமையான மைல்கல்லை இங்கிலாந்து கடந்து சென்றது.

இங்கிலாந்தில் உள்ள 315 உள்ளூர் பகுதிகளில், 13 பகுதிகளில் 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதே சமயம் 301 பகுதிகளில் 96 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வாரந்தோறும், கடந்த வியாழக்கிழமை வரை கொரோனா பரவல் உயர்வு கொண்ட 13 பகுதிகள் தரவரிசைப்பட்டுள்ளன

Bassetlaw, Nottinghamshire ( 224.8 to 374.6)
Derbyshire Dales (199.1 to 279.3)
Fylde, Lancashire (299.6 to 354.0)
Boston, Lincolnshire (168.2 to 213.8)
Wakefield, West Yorkshire (230.0 to 254.9)
Bradford, West Yorkshire (274.4 to 296.2)
South Derbyshire (354.3 to 374.8)
Barnsley, South Yorkshire (246.3 to 263.7)
Rushcliffe, Nottinghamshire (255.9 to 271.0)
East Northamptonshire (295.2 to 306.8)
North east Derbyshire (329.2 to 340)
North Tyneside (203.5 to 213.1)
Calderdale, West Yorkshire (213.3 to 221.8)