பிப்ரவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்பட உள்ள புதிய கொரோனா கட்டுப்பாடுகள்

0
459

சுவிட்சர்லாந்து கொரோனா விதிகளை மீறுவோருக்கான அபராதங்கள் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா விதிகளை மீறுவோருக்கு 50 முதல் 200 சுவிஸ் ப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.

புதிய விதிகளின்படி, மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்து, ரயில் நிறுத்தங்கள் மற்றும் பிற இடங்களில் மாஸ்க் அணியத் தவறுவோருக்கு 200 ப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன், தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோர், நிகழ்ச்சிகளை நடத்துவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், நேற்று முதல் விதிகளில் சில புதிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அவையாவன, கொரோனா தனிமைப்படுத்தல் காலம், பத்து நாட்களிலிருந்து ஏழு நாட்களாக குறைக்கப்படுகிறது.

அத்துடன், விமானம் மூலமாக நாட்டுக்குள் நுழைவோர் யாராக இருந்தாலும், பி.சி.ஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.