பத்து மலையில் கூட்டமில்லாக் கொண்டாட்டம்

0
436

ஆண்டாண்டுகளாக பத்துமலையில் வழக்கமாக நிரம்பி வழியும் பக்தர் வெள்ளம்  தற்போது நிலவும் கொவிட்-19 கிருமிப்பரவலால் வற்றியுள்ளது. அந்நாட்டின் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் காரணத்தால் அலைமோதும் கூட்டமும் ஆரவார கூச்சலும் இன்றி இருந்தது கோயில் வளாகம்.

கோயில் நுழைவாயிலுக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கு போலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் மலேசிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

காலை 9.15 வரையில் நிசப்தமாக இருந்ததாகவும் அதன் பின்னர் ஆலயத்தில் முருகனைப் போற்றும் பக்தித் துதிகள் இசைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோயிலுக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் ஒரு சில பக்தர்கள் வந்திருந்து கைக்கூப்பி வணங்கினர். ஆனால் அவர்கள் அங்கே கூட விடாமல் போலிசார் பணியில் இறங்கினர்.

மலேசியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இவ்வாண்டின் ஜனவரி 13ஆம் தேதியன்று மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த உத்தரவின் இறுதி நாள் தற்போது பிப்ரவரி 4ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.