மாரடைப்பு வருவதை தடுக்கும் நல்ல கொழுப்பு! இது உங்களுக்கு தெரியுமா?

0
470

நாம் சாப்பிடும் உணவில் எல்.டி.எல் எனும் கெட்ட வகை கொழுப்புகள் மற்றும் எச்.டி.எல் எனும் நல்ல வகைக் கொழுப்புகள் அதிகமாக நிறைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

நம்மில் பெரும்பாலானோர் நல்ல கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்து விடுவதால், இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

அன்றாடம் நாம் அதிகமாக கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், அது இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை உருவாக்கி நாளடைவில் மாரடைப்பை ஏற்படுத்துகிறது.

ஆனால் நல்ல கொழுப்புகள் அந்த ரத்தக் குழாய் அடைப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது என்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலை விஞ்ஞானிகள் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள் எது?

ஆய்வில் நிறைவுறாத கொழுப்பு அமிலங்களை கொண்டவை தான் நல்ல வகை கொழுப்புகள் என்று கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணத்திற்கு வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு இது போன்ற உணவுகள் நல்ல கொழுப்புகளை கொண்டவை.

பின்குறிப்பு

நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை கொண்ட நெய், முட்டை, மட்டன் போன்ற கெட்ட கொழுப்புகளை உடைய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால், அது மாரடைப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.