பிரான்சில் இரண்டு இளம்பெண்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய நபர்: பொலிஸ் கார் மீதே மோதிய சம்பவம்

0
50

பிரான்சில் இரண்டு இளம்பெண்களை சுட்டுக்கொன்றுவி

ட்டு தப்பிய ஒருவர், பொலிஸ் கார் ஒன்றின் மீதே மோதியதால் சிக்கினார்.

பிரான்சின் Valence நகரிலுள்ள நிறுவனம் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் அங்கிருந்து காரில் Guilherand-Granges என்ற நகருக்கு சென்ற அந்த நபர், அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மற்றொரு இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட இரண்டு பெண்களுமே உயிரிழந்த நிலையில், காரில் ஏறி தப்பியோட முயன்ற அந்த நபருடைய கார், பொலிஸ்கார் ஒன்றின் மீதே மோதியது.

பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நட

 

த்தி வருகிறார்கள். அவர் எதற்காக அந்த இரண்டு பெண்களையும் கொன்றார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இதற்கிடையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக பேசிய பிரான்ஸ் பிரதமர் Jean Castex, மொத்த பிரான்ஸ் நாடும் இந்த சம்பவங்களால் துயரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.