பிரபல அதிரடி கிரிக்கெட் வீரர் பொல்லார்டு மரணம் என பரவிய செய்தி! வெளியான உண்மை

0
59

பிரபல கிரிக்கெட் வீரரான பொல்லார்டு கார் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவிய நிலையில் அது போலியான செய்தி என்பது உறுதியாகியுள்ளது.

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருபவர் பொல்

லார்டு. இவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், பொல்லார்டு கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி நேற்று இணைய தளங்களில் வைரலாக பரவியது.

முக்கியமாக யூடியூப் பக்கங்களில் இது போன்ற செய்திகள் வெளியாகின.

இதனால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

ஆனால், இது போலி செய்தி என தெரிய வந்துள்ளது. பொல்லார்டு அபுதாபியில் 10 ஓவர் கொண்ட தொடரில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.