பாகிஸ்தானில் திடீரென்று வானில் தோன்றிய பறக்கும் தட்டு? விமானி கண்ட ஆச்சரிய காட்சி: வைரலாகும் வீடியோ

0
43

பாகிஸ்தானில் விமானி ஒருவர் பறக்கும் தட்டுபோன்ற ஒன்றை கண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் கடந்த 23-ஆம் திகதி முல்தானுக்கும், சாஹிவாலுக்கும் இடையேயான வானில், அசாதாரணமான பொருள் ஒன்று வானத்தில் சுற்றிக்கொண்டிருந்ததை விமானி ஒருவர் கண்டதாக கூறப்பட்டது.

அதன் பின், அது பிற கிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு என தீயாக செய்தி பரவியது.

இதையடுத்து இது குறித்து, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானி தனது விமானத்தில் இருந்து 1000 அடி உயரத்திலும், தரையில் இருந்து சுமார் 35 ஆயிரம் அடி உயரத்திலும், அசாதாரணமான ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருப்பதை கண்டு, அதை வீடியோவாக எடுத்துள்ளார்.

அவர் உண்மையில் கண்டது என்ன என்பதை உடனடியாக சொல்லி விட முடியாது. இது குறித்து அந்த விமானி அறிக்கை அளித்துள்ளார். அது பறக்கும் தட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

இது பற்றி நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.