டொரண்டோவிற்கு கடும் குளிர் எச்சரிக்கை

0
532

கனடா – டொரண்டோவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கடுமையான குளிர் நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை -22 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலையை உணரும் நிலை ஏற்படும் என்றும், இன்று பிற்பகல் குளிர் காற்றுடன் -15பாகை செல்சியஸ் செல்சியஸ் வரை குளிர் காணப்படும் என்றும் சுற்றுச்சூழல் கனடா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரவிலும், -22 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலையை உணரும் நிலை ஏற்படும். நாளை காலையில் -6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படியும், -22 வரையான வெப்பநிலையையே உணரக் கூடியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.