சாய்பல்லவி 38 வயது குணசித்திர நடிகருடன் ஜோடி சேருவாரா?

0
392

சாய்பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பாவக் கதை’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்த சாய்பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

புதிய படம் ஒன்றில் 38 வயதான காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி

வெற்றிகள் பல கண்ட சாய்பல்லவி, நகைச்சுவை நடிகரான காளி வெங்கட்டுக்கு ஜோடி சேர்வாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழ தொடங்கியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.