ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘வாத்தி கம்மிங்’ வீடியோ பாடல் ரிலீஸ்

0
471

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் வலுவான பவானி கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குட்டி பவானி ஆக நடித்த மாஸ்டர் மகேந்திரன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

அனிருத் இசையில் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை தியேட்டரை அதிர வைத்தது. அதுவும் வாத்தி கபடி சாங் எல்லாம் சூப்பர் லெவல்.

வாத்தி கம்மிங் வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. விஜய்யின் முந்தைய பாடல்களின் சாதனையை வாத்தி கமிங் பாடல் முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.