ரசிகரின் கேள்விக்கு நெத்தியடியாக ஜூலி அளித்த பதில்

0
87

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலியானா. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வரும்போது மக்கள் பலரின் வெறுப்பை சம்பாதித்து விட்டார். ஏனென்றால், நிகழ்ச்சி முழுவதும் பொய், பித்தலாட்டம் போன்ற பல சதி வேலைகளை ஜூலி செய்திருந்ததால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும், சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

பல பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பயங்கர கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜூலி.

ஜூலி பதிவிட்ட ஒரு புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர், ‘காசு வந்தா, காக்கா கழுதை கூட இது போல’ என்று கமெண்ட் அடித்து இருந்தார்.

இதற்கு நெத்தியடியாக ஜூலி, ‘எந்த ஊர்ல காக்கா சம்பாரிச்சு, கலர் ஆச்சு போய் வேலையை பாருங்க’ என்று பதில் அளித்துள்ளார். தற்போது இந்தப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.