ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது – நெதர்லாந்து அரசாங்கம்

0
527

நெதர்லாந்தில் தற்போது ஊரடங்க சட்டம் நடைமுறையில் உள்ளது. அது தொடரும் என்றும், நீக்கப்பட மாட்டாது என்றும் நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் வன்முறை போராட்டங்கள் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

ரோட்டர்டாம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் கடைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் கறைபடிந்தவையென நெதர்லாந்து நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை நெதர்லாந்தில் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் ஈடுபட்ட 180 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.