ஆப்கானிஸ்தானில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்

0
41

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 4 வெவ்வேறு இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் காலை 8.04 மணிக்கு முதல் குண்டுவெடிப்பு நடந்தது. காந்த கண்ணிவெடி தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்தனர். சலீம் கர்வான் பகுதியில் போலீசாரின் வாகனம் ஒன்றை இலக்காக கொண்டு அடுத்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர் என பாதுகாப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

3வது குண்டுவெடிப்பு காபூலின் ஷார் இ நா பகுதியில் நடத்தப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

காபூல் நகரின் மேற்கு பகுதியில் கோலாயீ தவகானா பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது. இந்த 4வது குண்டுவெடிப்பு தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர். எனினும், தலீபான் அமைப்பு உள்பட எந்தவொரு பயங்கரவாத குழுவும் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்று கொள்ளவில்லை.