0
450

போர்த்துகல், தென் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹொட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

குறித்த 30 நாடுகளின் பட்டியலில் போர்த்துகல், தென் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அதிக ஆபத்து நிறைந்தது என கருதப்படும், பிரித்தானிய நிர்வாகத்தினரால் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள 30 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கே கட்டாயத்தனிமைப்படுத்துதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

இவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

எந்த நாடுகளிலாவது கொரோனா உருமாற்றம் காண நேர்வது, கண்டிப்பாக அது உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சிக்கலையே ஏற்படுத்தும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதன் தாக்கம் இங்கிலாந்திற்குள் நுழைவதைத் தடுக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் பிரதமர் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார்.

கொரோனா உருமாற்றம் கண்டதாக பரவலாக அறியப்பட்ட நாடுகளான போர்த்துகல், தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜோன்சன்,

இந்த 30 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், மறுப்பேதும் தெரிவிக்காமல் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்க கேட்டுக்கொண்டுள்ளார்.