பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று!

0
421

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எ

திராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதி

ப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 36,89,746 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரி லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 16.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.