டெல்லி விவசாயிகள் போராட்டம்: செங்கோட்டையில் சீக்கிய கொடி: தீப் சித்து பின்னணி என்ன?

0
406

2021 ஜனவரி 26-ம் தேதி, கிசான் டிராக்டர் அணிவகுப்பின் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திலிருந்து ஒரு பகுதி மக்கள் பிரிந்து செங்கோட்டையை அடைந்தனர். அங்கு அவரகள் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் தீப் சித்து என்ற நடிகர் ஈடுபட்டதாக பேசப்பட்டு வருகிறது. தற்போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த போது, தீப் சித்து அங்கு இருந்தார் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். பின்னர்தான் தீப் சித்து விமர்சிக்கப்பட்டார். வாருங்கள் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

செப்டம்பர் 2020-ல் நடந்த கிசான் போராட்டத்தில் தீப் சித்து கலந்து கொண்டார். இதன்பின்தான் அவர் சமூக ஊடகத்தில் அதிக கவனத்தை ஈர்த்தார் .

தீப் சித்து ,போலீஸ் அதிகாரிகளுடன் ஆங்கில மொழியில் வாதிடுகின்ற வீடியோ ஒன்று வைரலானது, அதில் அவர் “இது ஒரு போராட்டம் , இது ஒரு புரட்சி” என்று கூறுவதைக் கேட்க முடியும். இந்தப் பிரச்னையின் தீவிரத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், அது இந்த நாட்டின் மற்றும் தெற்காசியாவின் புவிசார் அரசியலை வரையறுக்கும். ” என்றும் கூறுகிறார் .

விவசாயிகளின் அமைப்புகள் , சித்துவை தங்களிடமிருந்து விலக்கி வைத்தபோது , சமூக ஊடகங்களில் அது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் சிரம்ஜித் கௌர் கில், விவசாயிகள் அமைப்புகளின் நிலைப்பாட்டுடன் சமரசம் செய்து வைத்தார் , பின் அவர் அவ்வாறு முடிவெடுக்க காரணமாக இருந்த பிரச்னைகளையும் எடுத்துச் சொன்னார் .

விவசாயிகளின் போராட்டத்தில் சித்து மற்றும் தலைவர்களின் நிலைப்பாடு

விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது, தீப் சித்து உள்ளிட்ட அனைவரும், விவசாய சங்கம் மற்றும் விவசாய தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம் என கூறினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தீப் சித்து விவசாய தலைவர்களின் முடிவுகளை கேள்வி கேட்கத் தொடங்கினார், ஷம்பு எல்லையில் தனது சொந்த மேடையை உருவாக்கினார்.

எனினும், அவரது உரைகளில் பெரும்பாலானவை, மூன்று விவசாய சட்டங்களைக் காட்டிலும் , இந்திய அரசியல் சட்டத்தின், கூட்டாட்சி அல்லாத அமைப்பு முறை பற்றியே கவனம் செலுத்தப்பட்டது.

எனவே வேளாண் சட்டங்கள் குறித்து பேசவில்லை என்பதால் அவரை விவசாயிகள் முக்கிய போராட்டக் களத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர்.

விவசாய சங்கங்களில் ஒன்றான, உக்ரஹான் குழு, அவர், விவசாயிகள் போராட்டத்தின் திசையை மாற்றுவதாக திட்டவட்டமாக தெரிவித்தது.

ஜார்னைல் சிங் பிந்தராவாலே பற்றி தீப் சித்து தனது சமூக ஊடகத்தில் தொடர்ந்து பதிவிட்டதை அடுத்து விவசாயிகளின் அமைப்புகள் அவரை தம்மிடமிருந்து விலக்கி வைத்தன.

விவசாயிகள் அமைப்புகள் டெல்லியின் எல்லைகளை நோக்கி நகரும்படி அழைப்பு விடுத்தபோது, தீப் சித்து மக்களை திரும்ப செல்லுமாறு கேட்டுக்கொண்டார், ஏனென்றால் விவசாய அமைப்புகள் தங்கள் சொந்த நலனுக்காக அவரை பயன்படுத்துவதாக கூறினார் .

ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்ட பிறகு, தீப் சித்து மீண்டும் செயலில் இறங்கி, இந்த பேரணிக்காக மக்களை திரட்டத் தொடங்கினார். எனினும், அவர் அவுட்டர் ரிங் ரோட் சாலையில் திரள கூட்டம் சேர்த்தார்.

இதற்கிடையில், கிசான் மஸ்தூர் போராட்டக் குழு, மற்றொரு இடதுசாரி பாரதிய கிசான் தொழிற்சங்கம் (புரட்சி்) திட்டத்தின் படி, தில்லியின் அவுட்டர் ரிங் ரோட் சாலையில் பேரணி நடத்த அழைப்பு விடுத்தது. இந்த அறிக்கைகளினால், ஒருங்கிணைந்த கிசான் மோர்ச்சாவிற்கு, போலீஸ் அனுமதி அளித்திருந்த, பாதையிலிருந்து வேறு பாதைக்குச் செல்ல, தீப் சித்துவுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது.

திங்களன்று, தீப் சித்து மற்றும் லகா சிதானா ஆகியோர், சிங்கு எல்லையின் முக்கிய அரங்கில், அவர்கள் தில்லி நகருக்குள் சென்று, போலீஸ் மற்றும் அமைப்புகளால் தீர்மானிக்கப்படும் பாதையை விடுத்து வேறொரு அணிவகுப்பு நடத்துவார்கள் என்று கூறினர்.

பின்னர் செவ்வாய்க்கிழமை, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குழு ஒன்று செங்கோட்டைக்கு சென்றது . தீப் சித்துவும் அங்கு நின்று கொண்டிருந்தார். செங்கோட்டையில் இளைஞர்கள் காவி மற்றும் விவசாயிகளின் கொடிகளை ஏற்றி கொண்டிருந்த போது தீப் சித்து உடனிருந்தார்.

அப்போது அவர் தன்னை ஒரு வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தார் .

தீப் சித்துவின் விளக்கம்