கனடாவில் இருந்து பணத்தை கொண்டு வந்த மதபோதகர் பால் தினகரன்?

0
422

இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு உதவும் சாக்கில் கனடாவில் இருந்து பணத்தை இந்தியாவுக்கு கொண்

 

டு வரும் வேலையில் பால் தினகரன் இறங்கினார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புகழ்பெற்ற ‘இயேசு அழைக்கிறார்’ சபையின் தலைவராக இருப்பவர் பால் தினகரன். இந்த அமைப்புக்குச் சொந்தமாக சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பல கோடி மதிப்பி

லான சொத்துக்கள் உள்ளன.

இங்கு மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் 5 கிலோ தங்கம், 120 கோடிக்கான ஆவணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது கனடாவில் குடு

ம்பத்தினருடன் வசித்துவருகிறார் பால் தினகரன். அவரை விசாரணைக்கு ஆஜராகுமா

றும் நோட்டீஸ் கொடுக்கப்ட்டுள்ளது.

இதனிடையில் வருமானவ

ரி சோதனை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது,மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெ

ல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுப்பது பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளே.

பஞ்சாப்பை சேர்ந்த பலரும்கனடாவில் தொழில் செய்துவருகிறார்கள். அவர்கள் மூலமே இந்த போராட்டத்துக்குப் போதுமான நிதியும் கிடைக்கிறது.

இந்தநிலையில் விவசாயிகளுக்கு உதவும் சாக்கில், ‘இயேசு அழைக்கிறார்’ அமைப்புக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படுவது சமீபத்தில் இந்திய அரசின் கண்களில் பட்டுள்ளது.

கனடாவில் உள்ள தின

கரன் தனது அமைப்புக்குத் தேவையான நிதியை அங்கிருந்து திரட்டி, அதை வேளாண்சட்டத்துக்கு எதிராகப் போராடு்ம் விவசாயிகளுக்கு உதவும் சாக்கில் இந்தியாவுக்குள் கொண்

டுவரும் வேலையில் இறங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

இதை தெரிந்து கொண்டே வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.