உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா? இவற்றை எடுத்து கொண்டாலே போதும்!

0
489

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம்.

அந்தக் நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம்.

அதிலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு காய்கறிகள், பழங்கள், சாறுகள் என்று பல உள்ளன.

தற்போது உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற என்ன மாதிரியான பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.

ஆப்பிளில் உள்ள மாலிக் மற்றும் டார்டாரிக் அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது. அதுவும் ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. இதனால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.
அனைத்து சிட்ரஸ் பழங்களிலுமே வைட்டமின் சி அதிகம் உள்ளது. எலுமிச்சை உடலை சுத்தம் செய்வதில் சிறந்தது மட்டுமின்றி, வாய்வு பிரச்சனைகளை நீக்கவும் உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பெர்ரி பழங்களை சாப்பிடுவதற்கான சிறந்த வழி பெர்ரிப் பழங்களை நசுக்கி நீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பெர்ரி பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
அன்னாசி உடலில் உள்ள அழற்சி/வீக்கத்தைக் குறைக்க உதவி, ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் உட்காயங்கள் விரைவில் குணமாகவும் செய்யும். அன்னாசிப் பழங்களை எப்போதுமே வெட்டியவுடன் சாப்பிடுவதே சிறந்தது.
பப்பாளி பழத்தில் காணப்படும் பாப்பைன் என்ற நொதி புரோட்டீனை உடைத்தெறியவும், செரிமானத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோயைத் தடுக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பப்பாளியை எப்போதுமே வெட்டியவுடன் சாப்பிடுவதே நல்லது.
அடிக்கடி மாதுளை சாற்றினை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும். அதோடு, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக்க உதவும்