பிரேசிலில் ஒரு பெண் தன் மகளை அடித்துக்கொன்று, அவளது கண்களைத் தோண்டி எடுத்து, நாவை அறுத்து அவற்றை சாப்பிட முயன்றிருக்கிறார்.
Josimare Gomes (30) என்ற பெண், தன் மகளான Brenda da Silva (5)வுடன் குளியலறைக்குள் சென்று வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குழந்தையின் தாத்தாவான Marinho da Silva, குளியலறையிலிருந்து இரத்தம் வெளியே வருவதைக் கவனித்துள்ளார்.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்க, அங்கே, குழந்தை Brendaவின் கண்கள் பிடுங்கப்பட்டு, நாவு அறுக்கப்பட்ட நிலையில் அவள் இறந்துகிடந்ததைக் கண்டு பதறிப்போய் பொலிசாரை அழைத்துள்ளார் Marinho.
பொலிசார் வந்து Josimareக்கு மயக்க மருந்து செலுத்தி, அவரை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளார்கள்.
பாதி மயக்க நிலையிலேயே, தன் மகளுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதை விரட்டத்தான் தான் மகளுடைய கண்களைப் பிடுங்கி, நாவை அறுத்து தின்றதாகவும் கூறியிருக்கிறார் Josimare.
Josimare, மகளின் கண்களை பிடுங்கும்போதும், நாவை அறுக்கும்போதும், குழந்தை உயிருடன்தான் இருந்திருக்கவேண்டும் என்றும், பின்னர் காயங்கள் காரணமாகவே அவள் உயிரிழந்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகின்றனர்.
ஏற்கனவே மன நல பாதிப்பு கொண்டவர் என அறியப்பட்ட Josimareஐ, அதிகாரிகள் சிறையிலிருந்து மன நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அவரது மன நலம் குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.