நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி திட்டம் விரிவுப்படுத்தப்படும்: தென்கொரியா!

0
41

நவம்பர் மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் பணிகளை நிறைவுசெய்யும் நோக்கில், தடுப்பூசி திட்டம் விரிவுப்படுத்தப்படும் என கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமை (கே.டி.சி.ஏ) இயக்குனர் ஜியோங் யூன்-கியோங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சிகிச்சையின் முன் வரிசையில் சுமார் 50,000 மருத்துவ ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் உள்ளிட்ட முக்கிய குழுக்களுடன் பெப்ரவரி மாதத்தில் தடுப்பூசிகள் தொடங்கும் என அவர் கூறினார்.

65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதன் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று இந்த வாரம் வெளியான ஊடக அறிக்கைகளை அஸ்ட்ராசெனெகா மறுத்தது.

இதனிடையே வயதான சோதனை பங்கேற்பாளர்களின் இரத்த பகுப்பாய்வில் தடுப்பூசிக்கு வலுவான நோயெதிர்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

முதல் காலாண்டில் 1.3 மில்லியன் முன்னுரிமைக் குழுவிற்கும், 65 வயதிற்கு மேற்பட்ட 9 மில்லியன் மக்களுக்கும், இரண்டாவது காலாண்டில் மீதமுள்ள மருத்துவ ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட தென் கொரியா திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும்.