தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இந்திய விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது

0
496

இந்திய தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

 

இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஒக்ஸ்போர்ட் எக்சாசெனியா கொவிசீல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள 5 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானம் 11.35க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

5 இலட்சம் தடுப்பூசிகள், சுமார் 42 பெட்டிகளில் பொதியிடப்பட்டுள்ளது. அதனை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட விருந்தினர் கூடத்துக்கு வருகைதந்துள்ளார்.