அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றலாம் – அமெரிக்க அதிபரின் அதிரடி உத்தரவு

0
413

கடந்த 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார்.

ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றுள் பெரும்பாலானவை முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகள் ஆகும்.

மேலும் உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அறிவித்தார். இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும், மெக்ஸிகோ சுவர் கட்டுமானத்திற்கும் தடை விதித்தார்.

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கும் உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.