லண்டனில் அதிகரிக்கும் குடும்பத்தகராறுகள்; இலங்கையர்கள் உட்பட 22 பேர் பலி!

0
383

 

 

லண்டனில் இலங்கையர்கள் உட்பட மொத்தம் 22 பேர் 2020ஆம் ஆண்டில் குடும்பத்தகராறு காரணமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில், 2019 இல் குடும்பத்தகராறு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக இருந்த நிலையில் அதுவே, 2020இல் 22ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்களில் 12 பேர் குழந்தைகள் என்பது இன்னமும் பரிதாபமான செய்தி. இந்நிலையில் மன நல பாதிப்புகளும் அதற்கு ஒரு காரணமாக இருந்தன என்று சொன்னால், அது மிகையில்லை என்கிறார் Commander Dave McLaren.

ஆட்டிஸம் முதல் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்ட தனது மகனான பத்து வயது Dylanஐ தனியாக சமாளிக்க முடியாமல், அவனைக் கொலை செய்துவிட்டதாக அவனது தாயான Olga Freeman (40) ஒப்புக்கொண்ட செய்தி நினைவிருக்கலாம்.

கிழக்கு லண்டனில், ஏப்ரல் 26 அன்று, தனது குழந்தைகளான நிகிஷ் (3) மற்றும் ஒன்றரை வயது பவின்யா இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார் இலங்கைத் தமிழரான நடராஜா நித்தியகுமார் (40).அதேபோல ஜூன் மாதம் 30ஆம் திகதி Mitcham என்ற பகுதியில் வாழ்ந்துவந்த இலங்கையரான சுதா சிவானந்தம் (36) என்ற பெண், தனது ஐந்து வயது மகளான சாயாகியை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவமும் அரங்கேறியிருந்தது.

Harrow என்ற இடத்தில் வாழ்ந்துவந்த Mariam Benzain (32), தனது ஐந்து மாதக் குழந்தையான Elias Biadஐ கடந்த ஜூலை மாதம் கத்தியால் குத்திக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அக்டோபர் மாதம், மேற்கு லண்டனில் வாழ்ந்துவந்த மலேசியத் தமிழரான குகராஜ் சிதம்பரநாதன் (42), தனது மனைவி பூர்ண காமேஷ்வரி சிவராஜ் (36) மற்றும் தனது மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோரை கொலை செய்துவிட்டு, அவர்களது உடல்களுடனேயே இரண்டு வாரங்கள் வாழ்ந்துவந்த துன்பவியல் சம்பவமும் இடபெற்றிருந்தது.

இந்நிலையில் குடும்பத்தகராறுகளால் நடந்த கொலைகள் ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம், நாடு பொதுமுடக்கத்தில் இருந்தபோதும் கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை என சுட்டிக்காட்டப்படுள்ளது.

இதேவேளை லண்டனில்2018இல் 127ஆக இருந்த கொலைகளின் எண்ணிக்கை, 2019இல் 77 சதவிகிதமும், 2020இல்

96 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.கோடைக்காலத்தில் பொதுமுடக்கம் விலக்கப்பட்ட நிலையிலும், கத்திக் குத்து சம்பவங்கள் பொது முடக்கத்துக்கு முன்னிருந்ததைவிட அதிகரித்திருந்ததாக Commander Jane Connors தெரிவித்துள்ளார்.

ஆக, பொதுமுடக்கத்துக்கு முன்பும் குற்றச்செயல்கள், பொதுமுடக்கத்தின்போதும் அவை குறையவில்லை என்பது வேதனைக்குரிய விடையம்.

இதேவேளை , பொதுமுடக்கத்தை விலக்கிக்கொண்டபோதும் அவை அதிகரித்துள்ளதாக கூறிய அதிகாரிகள் அதற்கான காரணம் புரியவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.அதிகாரிகள்