இலங்கையில் தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படவில்லை – 3 ஆம் கட்டத்தின் போது விளம்பரம் வெளியிடப்படும்

0
431

கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல. இதனை தன்னிச்சையாக நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

நாளை மறுதினம் முதல் இலங்கை மக்களுக்கு ஏற்றப்படவுள்ள கொவிட் – 19 தொற்று மருந்து தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவில் இந்த தடுப்பூசி ஏற்றிக்கொள்வது அந்நாட்டு மக்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாளிக்கையிலேயே இவ்வாறு பதிலளித்தார்.

அவுஸ்ரேலியாவில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆனால் இலங்கையில் கட்டாயமில்லை.  இதேபோன்று இலங்கையிலும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

முதல் கட்டத்தின் கீழ் இந்த நோய்க்கு எதிராக களத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வது அவர்களது பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த தடுப்பு மருந்து முற்று முழுதாக இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். எந்தவித கட்டணமும் அறவிடப்படாது என்று தெரிவித்த அவர் தனியார் துறையினருக்கு இதனை விற்பனைக்காக வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இதுவரையில் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை. தனியார் துறையை சேர்ந்தோர் இந்த நோய் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படுவோருக்கு ஏற்றிக்கொள்வதற்கும் இலவசமாக அரசாங்கம் வசதி செய்துள்ளது.

இருப்பினும், சில நிறுவனம் தனிப்பட்ட முறையில் இதனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக்கூடும். அதுதொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

மூன்றாம் கட்டத்தின் கீழ் முதியோருக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ள தடுப்பு மருந்து பெற்றுக்கொள்வோர் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணைக்குழு தரவுகள் மூலமும், கிராம உத்தியோகத்தர் மூலமும் விபரங்களை பெற்று தடுப்பு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்றா நோய் உள்ளவர்களை இலக்காக கொண்டு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இவ்வாறானோரின் பெயர்கள் இடம்பெறாதவர்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 3 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும் பொழுது அதுதொடர்பான விளம்பரம் வெளியிடப்படும். தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் அந்த விளம்பரத்தில் இதற்காக குறிப்பிடப்படும் படிவத்தை நிரப்பி சுகாதார பிரிவுக்கு சமர்பிக்க வேண்டும்.