ஓ.டி.டி. தளங்கள் பலரது வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யா பாலன்

0
408

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

டங்களை ஓ.டி.டி.யில் வெளியிடுவதை பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் வரவேற்று உள்ளார். இது பற்றி அவர் கூறும்போது ” ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும். புதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் கைகொடுக்கும். நான் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். உரிய நேரத்தில் அதை செய்வேன்” என்றும் கூறினார்.