இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தின விழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்.
அதனை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதால், அசம்பாவிதம் நடக்காமல் மிகவும் விழிப்புடன் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, ராமேசுவரம், காரைக்குடி மற்றும் தென்காசி, கேரள மாநிலம் கொல்லம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.