கனடாவில் இறந்த பலுசிஸ்தான் பெண் போராளியின் உடல் பாகிஸ்தானில் அடக்கம்

0
892

கடந்த மாதம் கனடாவில் நாடுகடத்தப்பட்ட ஒரு பாகிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர் கரீமா பலோச் மர்ம மரணம் அடைந்த நிலையில், அவரது சடலம் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அவரின் சொந்த கிராமமான டம்ப் கிராமத்தில் கடுமையான பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 37 வயதான கரீமா பலூச்சின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த மாதம் கனடாவில் நாடுகடத்தப்பட்ட ஒரு பாகிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர் மர்ம மரணம் அடைந்த நிலையில், அவரது சடலம் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் கடுமையான பாதுகாப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் ராணுவம் கிராமத்தை மூடி சீல் வைத்ததாகவும், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதை தடுத்ததாகவும் கூறினர். முன்னதாக அவரது சடலம் நேற்று கனடாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டது.

கரீமா பலோச்சின் உடல், அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, டிசம்பர் 22 அன்று டொராண்டோவின் டவுன்டவுன் நீர்முனைக்கு அருகில் காணப்பட்டது. டொராண்டோ போலீசார் அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாக கருதவில்லை. ஆனால், அவர் கொல்லப்பட்டதாக அவரது ஆதரவாளர்களால் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கரீமா பலூச்சின் இறந்த உடல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதைப் பார்ப்பது திகிலூட்டுகிறது என்று பாஷ்டூனின் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் எம்பி மொஹ்சின் தாவர் கூறினார். இவர் பஷ்டூன் சிறுபான்மை உரிமைக்காக பிரச்சாரம் செய்கிறார்.

பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோ, கரீமா பலோச்சிற்கு இறுதி மரியாதை செலுத்த விரும்புவதாகக் கூறும் அவரது ஆதரவாளர்களை, ராணுவ வீரர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுவதைக் காண முடிகிறது.