போர்ச்சுக்கல் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிசோசா மீண்டும் வெற்றி

0
441

உலக நாடுகள் பலவற்றிலும் பரவி பெரும் அச்சத்தை கொடுத்து வருகிறது கொரோனா வைரஸ். இதற்கு மத்தியிலும், போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும் மைய வலதுசாரியுமான மார்செலோ ரெபெலோ டிசோசா மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மீண்டும் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டிசோசா 61.5 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் 5 ஆண்டு காலத்திற்கு அவர் சேவை செய்வார்.

சோசலிச வேட்பாளர் அனா கோம்ஸ் 13 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தில் ஆண்ட்ரே வென்ச்சுரா 12 சதவீத வாக்குகளை பெற்றார்.