லண்டனில் ஜூலை மாதம் வரை பூட்டப்படும் பப் மற்றும் உணவு விடுதிகள்?

0
156

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் லண்டனில், பப் , களியாட்ட விடுதிகள் மற்றும் உணவங்களை வரும் ஜூலை மாதம் வரை மூட பிரதமர் பொறிஸ்ஜோன்ஸ்டன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரங்களை, லோக்கல் கவுன்சிகளுக்கு கொடுக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

கொரோனா பரவும் முக்கிய இடமாக கழியாட்ட விடுதிகள் மற்றும் மதுபான சாலைகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவு விடுதிகளையும் ஜூலை வரை முற்றாக முடக்க தற்போது அலோசிக்கப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.