எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

0
75

புதிய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி தொடர்பான சட்டங்களை வகுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதே தவிர எரிபொருளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்படவில்லை.

2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் தொடர்பான சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை இயற்ற எரிசக்தி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மூலம் இலங்கையின் உள்ளூர் பெற்றோலிய வளங்கள் மற்றும் வாயுக்கள் பற்றிய ஆய்வு மற்றும் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் பரந்தளவில் அடையாளங் காணப்பட்டிருந்தாலும் குறித்த துறையின் முகாமைத்துவம் பொருத்தமான வகையில் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஏற்புடைய தரப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் குறித்த சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி தேவையான வரையறைகளை எடுத்துக் காட்டவும், ஒழுங்கபடுத்தல்கள் கொள்கைகள் மற்றும் தேசிய நடவடிக்கையாளர்களை வேறு பிரித்துக் காட்டுவதற்காக புதிய சட்டமொன்று தயாரிக்க வேண்டிய தேவையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.