லண்டனில் ஊரடங்கு விதியை மீறிய மேயர் வேட்பாளருக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம்! எவ்வளவு தெரியுமா? எச்சரிக்கை தகவல்!

0
158

லண்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிகளை மீறிய லண்டன் மேயர் வேட்பாளருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தீவிரமாக பரவு வரும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸால், மிகக் கடுமையான காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொலிசாருக்கு விதியை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தலைநகர் லண்டனி, பிரசாரத்தின் போது, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

49 வயதான Brian Rose மற்றும் அவரது அணியின் நான்கு உறுப்பினர்களும் தலா 200 பவுண்ட் அபராதத்தை பொலிசார் விதித்தனர்.

கடந்த வெள்ளிக் கிழமை முதல் லண்டனின் பெருநகரங்களில் சுமார் 15 நாட்கள் சுற்றுப்பயணத்தை Brian Rose துவங்கினார்.

அமெரிக்காவில் பிறந்த சுயாதீன வேட்பாளரும் முன்னாள் வோல் ஸ்ட்ரீட் வங்கியாளருமான Brian Rose தேர்தலில் வெற்றிபெற இரண்டாவது விருப்பமானவர். தற்போதைய தொழிற்கட்சி மேயராக இருக்கும் சாதிக் கானுக்குப் அடுத்தபடியாக என்று கூறப்படுகிறது.

இதனால் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறாமல், கவனமுடன் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.