கத்தாருக்கு நேரடி விமான சேவைகளை தொடங்கியது ஏர் அரேபியா.!

0
521

எகிப்து ஏர் அரேபியா விமான நிறுவனம்  அடுத்த வாரம் கத்தாருக்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பிப்ரவரி 2, 2021 முதல் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக எகிப்து ஏர் அரேபியா ட்விட்டரில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தோஹாவுக்கு எகிப்து ஏர் அரேபியா விமானம் E5741 (A320-174)  காலை 8:55 மணிக்கு (எகிப்து நேரம்) போர்க் எல் அரபு (Borg El Arab) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மதியம் 1:05 மணிக்கு (கத்தார் நேரம்) ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும். இடைவிடாத இந்த பயணம் மூன்று மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் அமீரகத்தின் ஏர் அரேபியா விமான நிறுவனம் ஷார்ஜா மற்றும் தோஹா இடையே தினசரி விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது.மேலும், கத்தார் ஏர்வேஸ் மற்றும் எகிப்து ஏர் ஆகியவை கெய்ரோவிலிருந்து தோஹாவுக்கு விமானங்களை இயக்க தொடங்கியுள்ளது.