ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரையை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

0
451

உயிரை மெல்ல மெல்ல கொல்லும் நோய்களுள் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது.

இதனால் நோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

இல்லை என்றால் இது வேறு பாதிப்புக்களை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.

என்னதான் மருந்து மற்றும் இன்சுலின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாலும், ஒரு சில ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்வதனாலும் கூட இதனை கட்டுப்படுத்த முடியும்.

அந்தவகையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். . டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை ஊக்குவிப்பதற்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் இந்த காய்கறி பயன்படுகிறது.
  • ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற விதைகள் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. இவை அனைத்தும் சரியான செரிமானத்திற்கும், சரியான நேரத்தில் சர்க்கரையை இரத்தத்தில் வெளியிடுவதற்கும் உதவுகின்றன.
  • பூண்டு கிட்டத்தட்ட நீரிழிவு நோய்க்கு ஒரு தீர்வாக கருதுகின்றன. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதோடு இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. பச்சையாக எடுத்துக் கொள்ளும்போது இது சிறந்தது.
  • பயறு, பீன்ஸ், சுண்டல் போன்றவை நேர்மறையான கிளைசெமிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அவை இந்திய பருப்பு வடிவமாக சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் கூடுதல் சர்க்கரையுடன் கூடிய சமையல் குறிப்புகளில் இல்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உணவில் முட்டை எடுத்துக் கொள்வது நல்லது. வேகவைத்து, அல்லது முட்டை பொரியல் செய்து காலை உணவின் போது எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமானது.
  • ஜி.ஐ.யைக் குறைக்கவும், சர்க்கரை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு சிறந்த உணவு ஓட்ஸ். இதில் ஜி.ஐ. மதிப்பெண் 55 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு சரியான தேர்வாக அமைகிறது.
  • உணவில் வெந்தயம், அவில் மட்டும் பாகற்காய் போன்ற பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.