ஜெயலலிதாவின் வேதா நிலையம் திறக்கப்படும் – தமிழக அரசு

0
568

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ஆம் ஆண்டு அறிவித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நினைவு இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் 27ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். நினைவு இல்லம் திறக்கப்பட்டதும், பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

ஜனவரி 27ஆம் தேதி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுநாளே வேதா நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.