பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்கம் அமுல்!

0
70

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனை பிரான்ஸின் மருத்துவ ஆலோசகர் குழுவினர் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

பிரான்ஸில் கடந்தவாரம் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா தொற்று பரவல் சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புதியவகை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரான்ஸ் அரசாங்க தரப்பினருக்கிடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.