இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
340

(Today Horoscope 25. 1.2021)

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

இன்று சார்வாரி வருடம், தை மாதம் 12ம் நாள், ஜமாதிஸானி 11ம் நாள், 25.1.2021 திங்கட்கிழமை, துவாதசி திதி காலை 12.19 வரை. மிருகசீருஷம் காலை 2.40 மணிவரை 3.6 அமிர்தயோகம் 48.42 மேல் சித்தயோகம். வாஸ்துநாள்

திதி: துவாதசி

சுபமுகூர்த்த நாள்

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

* நல்ல நேரம் : காலை 6.00 மணி – 7.00 மணி மாலை 4.30 – 5.30 மணி
* ராகு காலம் : காலை 7.30 – 9.00 மணி
* எமகண்டம் : மாலை 10.30 – 12.00 மணி
* குளிகை : காலை 1.30 – 3.00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்

மேஷம்:

நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேன்மை பெறும் நாள்.  பணம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு. பேச்சில் இனிமை கூடும்..

ரிஷபம்:

எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தட்டுப்பாடுகள் அகலும் நாள். பணவரவு திருப்தி தரும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்:

அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து சேரலாம்.

கடகம்:

யோகமான நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. இல்லத்திற்கு தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

சிம்மம்:

நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் கிடைக்கும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சிதரும். உறவினர்களின் பகை மாறும்.

கன்னி:

பெருமைப்படும் நாள். தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும். வருமானத்தை பெருக்கும் எண்ணம் தோன்றும்.

துலாம்:

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த பயணத்தில் திடீர் மாற்றம் செய்வீர்கள்.

விருச்சிகம்:

சேமிப்பில் சிறிது கரையலாம். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விவேகத்துடன் இருக்க வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.

தனுசு:

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்டஉதவிகளைச் செய்ய முன்வருவர். பணிவுடன் இருக்க வேண்டிய நாள். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும்.

மகரம்:

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். செல்வாக்கு மேலோங்கும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். திருமண பேச்சுவார்த்தை முடிவாகலாம்.

கும்பம்:

உற்சாகமான நாள். நட்பால் நன்மை கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் வீட்டுப்பிரச்சினை அகலும். பயணத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் பேசுவார்கள்.

மீனம்:

ஆச்சரியமளிக்கும் தகவல் வந்து சேரும்.  வருங்கால நலன்கருதி முயற்சி எடுக்கும் நாள். தொழிலில் புதியஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பூர்வீகசொத்து தகராறுகள் அகலும்.

மேலும் பல சோதிட தகவல்கள்

எமது ஏனைய தளங்கள்