மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்திய லேப்டாப்

0
431

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக, லேப்டாப் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ’ என்ற இந்த லேப்டாப், கீபோர்டை தனியாக பிரித்துக் கொள்ள முடியாதபடி வந்துள்ளது. இதில், 10வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர் உள்ளது. அத்துடன், 16 ஜி.பி., ரேம் கொண்டிருக்கிறது. டச் ஸ்கிரீன் வசதியும் உள்ளது. இந்த லேப்டாப்பின் விலை 63, 499 ரூபாயிலிருந்து தொடங்கி, அதன் திறன் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப, 1.10 லட்சம் ரூபாய் வரை உள்ளது.