இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
133

(Today Horoscope 24. 1.2021)

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

இன்று சார்வாரி வருடம், தை மாதம் 11ம் நாள், ஜமாதிஸானி 10ம் நாள்,
24.1.2021 ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.57 வரை. ரோகிணி காலை 12.13 மணிவரை 59.6 அமிர்தயோகம் 44.6க்கு மேல் சித்தயோகம். கரிநாள்

ஸர்வ ஏகாதசி

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

* நல்ல நேரம் : காலை 6.00 மணி – 7.00 மணி மாலை 3.30 – 4.30 மணி
* ராகு காலம் : காலை 4.30 – 6.00 மணி
* எமகண்டம் : மாலை 12.00 – 1.30 மணி
* குளிகை : காலை 3.00 – 4.30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

 

மேஷம்:

பேச்சு திறமையால் சூழச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள்.

ரிஷபம்:

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். மனதிற்கு இனிய செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.

 மிதுனம்:

சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பகை அகலும் நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். நூதன பொருட் சேர்க்கை உண்டு.

 கடகம்:

நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு தருவார்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்:

கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். கடல் தாண்டி நல்ல செய்தி வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கடன் சுமை குறைய புதிய வழிதோன்றும்.

கன்னி:

பேசும் வார்த்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

துலாம்:

எதிர்பாராத விரயங்கள் ஏற்படும் நாள். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

விருச்சிகம்:

வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பெற்றோர்களின் அன்பில் நெகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு:

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும்.

மகரம்:

வருமானம் உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியலாம்.

கும்பம்:

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கொடுக்கல் – வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். கட்டிடப் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.

மீனம்:

வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். பணியில் ஏற்பட்ட தேக்க நிலை அகலும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்காலத்திற்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்..

 

மேலும் பல சோதிட தகவல்கள்

எமது ஏனைய தளங்கள்