பொதுவெளியில் முககவசம் அணியாமல் இருந்த ஜோ பைடன்

0
38

அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த புதன்கிழமையன்று பதவியேற்றார் ஜோ பைடன். அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று முதல் உத்தரவை பிறப்பித்தார்.

ஜோ பைடன் டுவிட்டரில் ‘‘முக கவசங்கள் அணிவது ஒரு பாகுபாடான பிரச்சினை அல்ல. ‌இது எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற கூடிய ஒரு தேசபக்தி செயல். எனவே தான் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தேன்” என்று பதிவிட்டிருந்தார்.

புதன்கிழமை மாலை வாஷிங்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிடத்துக்கு சென்ற ஜோ பைடன் முக கவசம் அணியாமல் பேட்டியளித்தார். உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.