கொரோனா தடுப்பூசியை பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கும் இந்தியா

0
338

உலகிலேயே மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள், சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணியை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.

நேற்று முன்தினம் வங்காளதேசத்துக்கும், நேபாளத்துக்கும் மானிய உதவியாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று மியான்மருக்கும், சிசெல்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மியான்மருக்கும், சிசெல்சுக்கும் தடுப்பூசிகள் சென்றடைந்ததை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்தியாவின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்தபடியே வெளிநாடுகளுக்கு படிப்படியாக தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும். இதற்காக இந்தியாவில் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.