இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
584

(Today Horoscope 22. 1.2021)

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

இன்று சார்வாரி வருடம், தை மாதம் 9ம் நாள், ஜமாதிஸானி 8ம் நாள்,
22.1.2021 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி இரவு 7.11 வரை.
சித்தயோகம்.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

* நல்ல நேரம் : காலை 9.30 மணி – 10.30 மணி மாலை 4.30 – 5.30 மணி
* ராகு காலம் : காலை 10.30 – 12 மணி
* எமகண்டம் : மாலை  3.00 – 4.30 மணி
* குளிகை : காலை 7.30 – 9.00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

மேஷம்:

வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். நண்பர்கள் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு பாராட்டுவர்.

ரிஷபம்:

செய்தொழிலில் லாபம் உண்டு. அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். பணம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.

மிதுனம்:

சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்:

தொழிலில் வளர்ச்சி கூடும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உங்கள் கருத்துகளை பலரும் கேட்க முன்வருவர். திருமண முயற்சிகள் கைக்கூடும்.

சிம்மம்:

உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். கடன் சுமை குறையும். போட்டிகளில் வெற்றி பெறும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் நெருங்கி வருவார்கள். .

கன்னி:

பேச்சில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

துலாம்:

துணிவும், தன்நம்பிக்கையும் கூடும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். கொடுக்கல், வாங்கல் சுமூகமாக இருக்கும்.

விருச்சிகம்:

உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவாரகள். வெற்றி வந்து சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். கடல் தாண்டி வரும் செய்தி நற்செய்தியாக அமையும்.

தனுசு:

நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்கள் வாங்கலாம்.

மகரம்:

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும். புதிய தொழில்கள் தொடங்கும் முயற்சிகள் ஈடேறலாம். 

கும்பம்:

வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். சேமிப்பு செலவாகாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. சமுதாயப்பணியில் ஆர்வம் ஏற்படும்.

மீனம்:

இன்றைய நாள் சுபமானதாக அமையும். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்

எமது ஏனைய தளங்கள்