திஷா பதானிக்கு வந்த கொலை மிரட்டல்

0
431

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015 ஆம் ஆண்டில் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. பாகி 2, பாரத் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர தயாராகும் ராதே படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்து உள்ளார்.

திஷா பதானிக்கு போனில் மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் திஷா பதானியை கொலை செய்யப் போவதாக மிரட்டி உள்ளார். இதுபோல் போலீஸ் நிலையத்துக்கும் திஷா பதானியை கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் போன் வந்துள்ளது.

போன் இலக்கத்தை வைத்து விசாரித்தப் பொழுது பாகிஸ்தானில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.